Breaking

Monday, September 30, 2019

குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் 2019-2020

வாக்கிய பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்
ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான்  பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம்
நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.14 மணிக்கு
விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருகணித பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்
அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ம் 04.11.2019 தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின்
நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில்  செவ்வாய்க்கிழமை
விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



தனுசு ராசி பொதுப்பலன்:
குருபகவான் வீட்டில் ஜனனமான இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் விளங்குவார்கள். மேலும் தோல்வி என்பதை தம் வாழ்நாளில் அடையக் கூடாது என்று நினைப்பார்கள். சதா ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டும் எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டும் இருப்பார்கள். எப்பொழுதும் ஒரு லட்சியத்தை நோக்கமாக வைத்துக் கொண்டு அந்த லட்சியத்தை அடைய எந்த ஒரு தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவார்கள்.  எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு அதிலிருந்து விடுபட முயற்சி செய்வார்கள்.
குருபகவான் இந்த ராசி அதிபதியாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் உயர்ந்த உள்ளத்துடனும் எதனையும் பரந்த மனப்பான்மையுடனும் தொலைநோக்குச் சிந்தனையுடனும் செயல்படுவார்கள். நல்ல தன்னம்பிக்கையும் முயற்சியையும் எப்பொழுதும் மேற்கொள்வர். இறைவழிபாட்டில் மனதை செலுத்தி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வர். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். தங்களுக்கு சரி என்று மனதிற்குப்பட்டதை சரியாகச் சொல்வதிலும் செய்வதிலும் வல்லவர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இது வரை 12-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் ஜென்ம ராசிக்கு செல்கிறார்.
தனுசு ராசியை பொறுத்த வரை குருபகவான், ராசி அதிபதியாகவும், நாலாம் அதிபதியாகவும் வருவார்.
இதுநாள்வரை 12ம் இடமான விருச்சிகத்தில் நின்று விரயத்தை கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது ராசியில் உள்ள சனி பகவானுடன் இணைந்து 7ம் வீட்டில் இருக்கும் ராகுவை பார்ப்பதால் ராகு மற்றும் சனியால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும்.
அதேநேரத்தில் தனுசு ராசியைப் பொறுத்தவரை இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை.
குரு பொதுவாக ஜென்மத்தில் வரக்கூடாது.
ஆனால் இந்த விதி தனுசு ராசிக்காரர்களுக்கு முழுமையாக பொருந்தாது ஏனென்றால் ராசிக்கு அவரே அதிபதி.
இங்கு ராசி அதிபதியாகிய குருபகவான் ராசியிலேயே ஆட்சி பெறுவது ஒரு விதத்தில் நல்லதே.
இந்த குரு பெயர்ச்சியால் எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்கு பின்னரே உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்தில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்ப சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் படிப்படியாக குறையும். மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உறவினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குல தெய்வ வழிபாடு மூலம் சிறப்பான பலனை பெற முடியும். கூடுமானவரை உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவார்.
குரு 5-ஆம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும். பெரியோரின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தடையின்றி நடைபெறும்.
ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் ஆன்மீக எண்ணம் அதிகரித்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும்.பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். புதிய திட்டங்களில் பொறுமையும், நிதானமும்  தேவை. முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
இந்த குரு பெயர்ச்சியில் ஜென்ம குரு சுமாரான பலன்கள் தந்தாலும் கெடுதல் எதையும் குரு பகவான் செய்ய மாட்டார்.
அதிர்ஷ்டம்:
எண் :1,2,3,9,
கிழமை : வியாழன், திங்கள்
திசை :வடகிழக்கு
நிறம் : மஞ்சள், பச்சை
கல் : புஷ்ப ராகம்
தெய்வம் : தட்சிணா மூர்த்தி
பரிகாரம்:
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கி வர  வாழ்க்கை வளமாக அமையும்.

No comments:

Post a Comment