Breaking

Saturday, November 25, 2017

அருள்மிகு பொது ஆவுடையார் திருக்கோயில் பரக்கலக்கோட்டை - POTHU AAVUDAYAR TEMPLE THANJAVUR DISTRICT

அருள்மிகு பொது ஆவுடையார் திருக்கோயில் பரக்கலக்கோட்டை
      
        மூலவர்:     பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)
ஆகமம்/பூஜை:சிவாகமம்
பழமை:500 வருடங்களுக்குள்
தல விருட்சம்: ஆலமரம்
ஊர்:பரக்கலக்கோட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:
கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.
தல சிறப்பு:
பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.
         தல வரலாறு : முனிவர்கள்  இருவர்.ஒருவர் - வானுகோபர். இவர் இல்லறத்தில் இருந்து சிவநெறியை கடைப்பிடிப்பவர்
மற்றவர் - மகாகோபர். இவர் துறவறத்தில் இருந்து சிவநெறியை கடைப்பிடிப்பவர்
இருவரும் - அவர் ,அவர்  நெறியே சிறந்தது என சாதித்தனர்.
இல்லறமே சிறந்தது என இவர் முழங்க, துறவறமே சிறந்தது என அவர் முழங்க இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா... துறவறமா?' என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட... இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர். 'முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது' என்று பதறிய இந்திரன், ''தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள்; தக்க பதில் கிடைக்கும்'' என்றான். அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர்; விவரம் சொல்லி விளக்கம் கேட்டனர்.             
தில்லைக்குத் தென் திசையில் - நீங்கள் தவம் செய்த இடத்தில்  வெள்ளால மரம் உள்ளது. அதன் அருகில்  உறங்காப்புளியும் உறங்கும்புளியும் ஒருசேர தழைத்திருக்கும் பொய்கைநல்லூர் எனும் திருத்தலத்தில் தாமரைக் குளத்தின் கரையில் காத்திருப்பீர்களாக!.. - என கூறியருளினார். 
அதன்படி வானுகோபரும் மகாகோபரும் பொய்கை நல்லூருக்கு வந்தனர்.
உறங்காப் புளியின் கீழ் வானுகோபரும் உறங்கும் புளியின் கீழ்  மகாகோபரும் ஈசனின் வரவினை எண்ணித் தவமிருந்தனர்.
ஒருநாள் சோமவாரம் எனும் திங்கட்கிழமை.
திருச்சிற்றம்பலம் எனும் தில்லையில் அர்த்தஜாம பூஜைகள் நிறைவு பெற்று கோயில் நடை சாத்தப்பட்டது; அடுத்த நிமிடம்... முனிவர்களுக்கு எதிரே வெள்ளால மரத்தில்  காட்சி தந்தார் நடராஜ பெருமான். பதற்றமும் சிலிர்ப்பும் பொங்க இறைவனை நமஸ்கரித்தனர் முனிவர்கள். ''இல்லறமாக இருந்தாலென்ன... துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், உண்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது!  இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு. இதில் உயர்வு தாழ்வுக்கு இடமே இல்லை. இரண்டும் இணையானதே!'' என்று அருளினார் சிவனார். இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்றும், இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்தது.
''தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்'' என்று முனிவர்கள் வேண்ட, ''அப்படியே ஆகட்டும்'' என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். பொய்கைநல்லூர்,என்ற ஊர்  பின்னாளில் பரக்கலக்கோட்டை ஆனது.
      தல சிறப்பு :
சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் நள்ளிரவில்  இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும், நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் நடைபெறும். பகலில் கோயில் நடை திறக்கப்படுவதில்லை. காரணம் சிவன் சிதம்பரத்தில் இருப்பதால்.
             திங்கட்கிழமை மட்டும் இரவு திறந்து, நள்ளிரவில் நடை சார்த்தப்படும். பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே வெள்ளமென குவிகின்றனர். அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை.
திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் இந்த ஆலயம், வருடத்தில் ஒரேயரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; ஸ்வாமிக்கு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது; லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அந்த நாள்... தைத் திங்களாம் பொங்கல் திருநாள்!
சுற்றுவட்டார மக்களுக்கு இஷ்ட தெய்வம், குல தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே பொதுஆவுடையார்தான்! இவரை மனதார வேண்டி  நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் உறுதி. இவரை வேண்டிக் கொண்டு, நகைக்கடை, பேக்கரி, துணிக்கடை என எந்த வியாபாரம் துவங்கினாலும் லாபம் நிச்சயம். இதில் மகிழ்ந்து, நெல் தருகின்றனர்; கம்பும் கேழ்வரகும் ,எலுமிச்சை, நார்த்தங்காய்,  தேங்காயையும் மாங்காயையும் தருகின்றனர்; ஆடு, கோழி, மாடு என தருகின்றனர்; பேனா, நோட்டுப் புத்தகம் வழங்குபவர்களும் உண்டு.
கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள் என எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்படுகிறது.
இந்த கோயிலுக்கு ஒரு முறை வந்து வேண்டினால்  செல்வச் செழிப்புடன் திகழலாம்; நோய் நொடியின்றி வாழலாம்; கல்வி-கேள்வியில் சிறக்கலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர் பக்தர்கள்.
   

No comments:

Post a Comment