Breaking

Saturday, November 25, 2017

SRI ANGALA PARAMESWARI AMMAN TEMPLE VELUKKUDI-அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் வேளுக்குடி


    அருள்மிகு அங்காளபரமேஸ்வரி          திருக்கோயில்



   மூலவர்:அங்காளபரமேஸ்வரி
தல விருட்சம்:வேம்பு, அரசு
தீர்த்தம்:கூத்தன்குளத்து தீர்த்தம்
பழமை:500 வருடங்களுக்குள்
ஊர்:வேளுக்குடி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு


தல வரலாறு :


                               தட்சன் தான், நடத்திய வேள்வியில்  திருமால், பிரம்மன், அக்கினி, இந்திரன், சூரியன் உள்ளிட்டவர்களை அழைத்தவர். ஈசனை அழைக்கவில்லை. இதை அறிந்த பார்வதி தன்,  தந்தை நடத்தும் வேள்விக்கு சென்று வரவும் ஈசனை அழைக்காமல் வேள்வி நடத்தியது தவறு என்பதை சுட்டிக்காட்டவும்  ஈசனிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு ஈசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாக்குவாதம் செய்து, ஈசன் அனுமதியில்லாமல், அவர் வார்த்தையை மீறி வேள்வி நடக்கும் இடத்திற்கு பார்வதி சென்றார். அங்கு அவர் தந்தையால் புறக்கணிக்கப்பட்டார். மேலும் தன் கணவரான ஈசனை அழைக்காமல் நடத்திய வேள்வியை அழியட்டும் என சாபமிட்டு  விட்டு சிவபெருமானிடம் சென்றபோது, ஈசன் பார்வதி மேல் கோபப்படுகிறார். இதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை உணர்ந்தேன் மன்னித்து ஏற்க வேண்டினார். மனம் குளிர்ந்த ஈசன் சோதனை நடத்தியதாக கூறி பின்னர் ஏற்றார். அதற்கான வேள்வி இந்த பகுதியில் நடந்ததாக கருதி இங்கு அப்பகுதியில் 400 ஆண்டிற்கு முன் தெருக்கூத்து கலைஞரான சடையப்ப பூஜாரி அங்காள பரமேஸ்வரியை முன்னிலைப்படுத்தி கோயில் அமைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறந்த கோயிலுக்கான விருதை காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த 2000 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார் என்பது சிறப்பு
     
கோயில் அமைப்பு :



                             கோயிலின் தெற்குபக்கம் ஐந்து நிலை ராஜகோபுரம், கோபுரத்தில் ஐந்து கலசம், கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைந்துள்ளது. கோயிலின் பிரகாரத்தில் நடராஜர், மயானருத்திரர், பேச்சியம்மன்,  அர்த்த மண்டபத்தில் வலது பக்கம், கிழக்குப்பக்கம்பார்த்த வகையில் கங் காளருத்ரரும்,வினாயகரும், அருகில் தெற்கு முகம் பார்த்த வகையி ல் அகோர வீரபத்திரர்  அவர் அருகில் சக்தியும், சற்று தொலைவில் தட்சன் ஆட்டுத்தலையுடன் நிற்பதுடன், வலதுபக்கம் மயான ருத்ரர் சிவசக்தி ரூப அம்பாளும், அருகில் மேற்கு பக்கம் விநாயகரை பார்த்த வண்ணம் சப்தகன்னிகள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தில் மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுடனும், பாவாடைராயன் காந்தழகி, கந்தர்வழகியுடன் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பார்த்த வண்ணம் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பேச்சியம்மன் பத்து கரங்களுடன் சிங்கமுக வாகனம் எதிரில் அமர்ந்திருக்கும் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இருளன் காட்டேரியுடன் தனி சன்னதியிலும், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கன்னியம்மாளுடன், காவலாளி தொட்டியத்து சின்னானுடன் தனி சன்னதியிலும், கருப் பண்ணசுவாமி கருப்பாயி அம்மனுடன் தனித்தனி சன்னதியிலும் மேற்கு பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர்.
    
திருமணத்தடை, புத்திரபாக்கியம்,நோய் நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறு நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment