Pancha Bootha Sthalangal -சிவன் பஞ்சபூத ஸ்தலங்கள்









                    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.

பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை;

சிதம்பரம் (ஆகாயம்),
திருவண்ணாமலை (நெருப்பு),
திருவானைக்காவல் (நீர்),
காளகஸ்தி (காற்று),
காஞ்சீபுரம் (நிலம்) ஆகும்.

இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி காளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.




   கோவில் பற்றி பார்க்க :  1. ஆகாயம் - சிதம்பரம்

                                                2. நெருப்பு - திருவண்ணாமலை

                                               3. நீர் - திருவானைக்காவல்

                                                4. வாயு - காளஹஸ்தி

                                                  5. மண் - காஞ்சிபுரம்

No comments:

Post a Comment