மூலவர்:ஐராவனேஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை:காமிக ஆகமப்படி பூஜை
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது.
ஊர்:ஊட்டியாணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
உற்சவர்:-
அம்மன்/தாயார்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை:காமிக ஆகமப்படி பூஜை
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது.
ஊர்:ஊட்டியாணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஐராவனேஸ்வரர் திருக்கோயில், புள்ள மங்கலம் அஞ்சல், நீடாமங்கலம் தாலூகா, ஊட்டியாணி, திருவாரூர் மாவட்டம் 610209.
தல வரலாறு :
இத்திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. சோழர்கள் கட்டிய 108 கோயில்களில் இதுவும் ஒன்று. சிவனடியார்கள் சிலர் இக்கோயிலில் சிவதரிசனம் செய்து விட்டு தங்கியிருந்தார்கள் அவர்கள் தானம் பெற்றுதான் உணவு அருந்துவார்கள். ஆனால் இப்பகுதியில் விவசாயம் வளர்ச்சி இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்தார்கள் அதனை உணர்ந்த சிவனடியார்கள் தானம் கேட்டு செல்லவில்லை. சிவனடியார்கள் பசியில் இருப்பதை அறிந்த சிவன். அவர்களின் பசியைப்போக்க சிவனே தானம் கேட்டு சென்றார் அவருக்கு கிடைத்த நெல் மணிகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து சிவனடியார்கள் பசியை மட்டுமல்லாமல் மக்களின் பஞ்சத்தையும் போக்கினார். சிவனே தானம் கேட்டு சென்றதால் இவரை பிச்சாண்டார் என்றும் அழைப்பார்கள். முதன் முதலில் சிவன் ஆன்மாக்களுக்காக நெற்பயிரை வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது. ஈசன் பக்கதர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கி, இன்னல்களை போக்கி நல்வாழ்வு வாழ அருள்பாலிகிறார். இப்பகுதியில் கோடையிலும் விவசாயம் செழித்து வளர்வதை இன்றளவும் கண்கூடாக தெரிகிறது.
திருவிழா:
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.
பொது தகவல்:
இத்திருக்கோயில் மூலவர் மற்றும் அம்பாள் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். நீண்ட காலமாக முட்புதற்கள் மண்டி கிடந்த சிவனுக்கு கோயில் கட்டியது 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை:
நாகதோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 21, 22 மற்றும் 23 தேதிகளில் காலை 6 மணயில் இருந்து 6.15 மணி வரை சிவன் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பு.
No comments:
Post a Comment