ஒரே ஆண்டில் 4 கிரகங்களின் இடப்பெயர்ச்சி
நவக்கிரகங்களில் ஸ்ரீ குருபகவான், ராகு, கேது ஆகிய கிரகங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார்கள். அதேபோல ஸ்ரீ சனீஸ்வர பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவேசிப்பார். இந்த ஆண்டில் மட்டும் குரு, ராகு, கேது, சனி ஆகிய 4 கிரகங்கள் இந்த ஆண்டில் பெயர்ச்சியாவது தனிச்சிறப்பாகும்.
குருப்பெயர்ச்சி
பிரகஸ்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ குரு பகவான் வருகிற ஆவணி மாதம் 17-ந் தேதி (2. 9. 2017 ) சனிக்கிழமை கன்னி ராசியில் இருந்து காலை 9.31 மணிக்கு சுக்கிரன் வீடாகிய துலாம் ராசிக்கு பிரவேசித்து அருள்கிறார். இந்த குருப்பெயர்ச்சியால் விருச்சிகம், கும்பம், மேஷம், மிதுனம், சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலனை அடைவார்கள். மேலும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் உரிய பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி
சாயா கிரகங்களாகிய ஸ்ரீ ராகுபகவான் ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை மதியம் 12.48 மணிக்கு சிம்மராசியில் இருந்து சந்திரனின் ஆட்சிவீடாகிய கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். ஞான மோட்ச காரகனாகிய கேது பகவான் இதே தேதியில் கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். பொதுவாக ராகுவும் கேதுவும் நன்மையும், தீமையும் கலந்த சம பலன்களை வழங்குவார்கள். அவர்கள் இருக்கும் ஸ்தானத்தை கொண்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
சனிப்பெயர்ச்சி
ஆயுட்காரகனாகிய ஸ்ரீ சனீஸ்வர பகவான் மார்கழி மாதம் 4-ந் தேதி (19.12.2017) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு செவ்வாய் வீடாகிய விருச்சிக ராசியில் இருந்து ஸ்ரீ குரு பகவான் வீடாகிய தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
ஒரே ஆண்டில் 4 கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் பல மாற்றங்கள் நடைபெறும். அனைத்தும் நன்மையாக அமைய ஆலய வழிபாடு செய்வோம்.
No comments:
Post a Comment