அருள்மிகு ஸ்ரீ ஐயனார் அருள் சித்தர் நைனார் திருக்கோவில்
இராஜாங்கட்டளை
மூலவர்: ஸ்ரீ ஐயனார்
சித்தர் : நைனார்
தலவிருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சித்தர் தீர்த்தம்
பழமை : 200 -300 வருடங்களாக
ஊர் : இராஜாங்கடடளை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
சித்தர் : நைனார்
தலவிருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சித்தர் தீர்த்தம்
பழமை : 200 -300 வருடங்களாக
ஊர் : இராஜாங்கடடளை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
தலவரலாறு : முன் காலத்தில் இந்த பகுதியில் காடுகள் நிறைந்துள்ளது. நாவல் மரத்தின் அருகே ஐயனார் கோயில் (குடுசையில் ) இருந்து வந்துள்ளது. அந்த தருணத்தில் பல ஊர்களை கடந்து வந்த சித்தர் நைனார் இவ்வழியே கடக்கும் போது ஐயனாரை வழிபட்டார். பின்னர் ஐயனாருக்கு ஆலயம் அமைக்கவும் தொண்டு பணி செய்யவும் மனம் விரும்பிய நிலையில் இங்கயே தங்கிவிட்டார்.சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் சித்தரை பற்றி அறியாமல் இருந்தார்கள். சில காலம் கடந்தது.விவசாயம் பாதிப்படைந்து அப்பகுதி மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவானது. கூடவே நோய்களும் ஏற்பட்டது. அவர்கள் வளர்த்து வந்த ஆடு, மாடுகள் போன்ற ஜீவராசிகள் நோய்வாய்ப் பட்டு மடிய துடங்கியது அப்பகுதியில் ஒருத்தர் தனது ஆடுகள் அனைத்தும் நோய் வாய்பட்டு இருப்பதை பார்த்து மனவேதனையில். அதில் ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு ஐயனார் சன்னதிக்கு வந்தடைந்தார். ஐயனாரின் பாதத்தில் வைத்து தனது மனவேதனையை சொல்லி அழுதுக்கொண்டிருந்தார். அருகில் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் விபூதியை எடுத்து ஆடு வளர்ப்பவரிடம் குடுத்து ஆட்டுக்கு பூசிவிட்டு அமைதியாக இருக்க சொன்னார் சித்தர். சற்று நேரத்தில் படுத்துருந்த ஆடு குணமடைந்து எழுந்திருக்க. ஆச்சர்யம் அடைந்த ஆடு வளர்ப்பவர் சித்தரின் பாதங்களில் பணிந்து தனது பட்டியில் உள்ள பல ஆடுகள் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான். அதற்க்கு சித்தர் தனது கைகளால் ஒரு பிடி விபூதியை எடுத்து ஐயனாரை வேண்டி ஆடு வளர்ப்பவரிடம் குடுத்தார்.அதை வாங்கி கொண்டு குணமடைந்த தனது ஆட்டை சித்தர் க்கு காணிக்கையாக அங்கேயே விட்டுட்டு தனது கிராமத்தை நோக்கி சென்றார். பின்னர் தனது ஆடுகள் மட்டுமல்லாமல் நோய்வாய்ப் பட்ட மக்களுக்கும், ஆடு, மாடுகள் மற்ற ஜீவராசிகளுக்கும் பூசிவிட்டு நடந்ததை கிராமவாசிகளிடம் கூறிவிட்டு இரவு உறங்க சென்றார்.விடிந்து காலையில் பார்க்கும் போது அனைவரும் குணமடைந்து இருந்தார்கள் சித்தர் நைனாரின் புகழ் காட்டு தீ போல மற்ற கிராமங்களுக்கும் பரவியது மக்கள் கூட்டம் கூட்டமாக ஐயனார் கோயிலுக்கு வந்தடைந்தார்கள்.அவர்கள் நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சித்தர்.அது மட்டுமல்லாமல் விவசாயத்திற்கு தேவையான உதவிகள் மற்றும் அறிவுரை வழங்கினார். செழித்து வளர்ந்தது விவசாயம்.மக்கள் வறுமை நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். மக்கள் எந்த தொழில் செய்தாலும் அதன் முதல் லாபத்தை சித்தர் நைனார்க்கு காணிக்கையாக குடுத்தார்கள்.சித்தர் ஊர் மக்களிடம் எனக்கு வரும் காணிக்கையை வைத்து ஐயனாருக்கு ஆலயம் அமைக்கவும் என்று கூறி ஜீவசமாதி அடைந்தார். மக்களால் ஐயனாருக்கு ஆலயம் கட்டப்பட்டது. சித்தர்க்கும் ஆலயம் அமைக்க வேண்டும் என்று விரும்பினர் மக்கள்.பல பேர் கனவில் சித்தர் தோன்றி தனக்கு ஆலயம் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே சித்தர்க்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கம்பீரமான உருவத்துடன் 10 அடி உயரத்தில் ,முழங்கால் மண்டியிட்டு , முறுக்கு மீசையுடன், முண்டாசு கட்டி, வலது கையில் அருவாளுடன் இடது கையில் கதையுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். சித்தர் நைனார். மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
தலசிறப்புகள் : விவசாயம் நெற்பயிர்கள் தென்னை வாழை இது போன்ற தொழில் செய்பவர்கள் முதலில் சித்தர் நைனாரை வேண்டி விபூதியை போட்டு ஆரம்பித்து அறுவடையில் முதலில் ஒரு பகுதியை சித்தர்க்கு காணிக்கையாக இன்றளவும் தந்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்கு நைனார் பெயரை வைத்துள்ளனர்.நைனப்பன் ,நைனார், நைனார் ராஜா என்று 500 பேருக்கு மேலாக உள்ளனர்.அடையாள காண கடினமாக இருந்தாலும். சித்தர் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அளவற்றது. ஆச்சர்யத்தின் உச்சமென்றால் இங்கே மக்கள் யாரும் சித்தர் நைனாரை சித்தராக கருதவில்லை. மாறாக கடவுளாகவே வழிபடுகின்றனர். களவு போகும் பொருள்களை மீட்டு தருவதால் காவல் தெய்வமாகவும், விளங்குகிறார்.
திருவிழா : பங்குனி உத்திரத்தில் ஆரம்பித்து ஒரு வாரம் நடைபெறுகிறது. காவடிகள், தீமிதி மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெருகிறது.
முகவரி :அருள்மிகு ஐயனார் அருள் சித்தர் ஸ்ரீ நைனார் திருக்கோயில்
இராஜாங்கட்டளை
இராஜாங்கட்டளை
No comments:
Post a Comment