குருப்பெயர்ச்சி:
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ரிஷப ராசி பொதுப்பலன்:
ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் எதிலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதே சமயம் எப்பொழுதும் தூய்மையாகவும் உண்மையாகவும் இயல்பாகவும் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். மேலும் பணம் சம்பாதிப்பதிலும் ஆர்வம் உடையவர்கள். எப்பொழுதும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள்.
மேலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் புன்முறுவலுடனும் விளங்குவர். தங்களது கவலைகளை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நல்ல ராஜதந்திரம் உடையவர்கள்.
மேலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் புன்முறுவலுடனும் விளங்குவர். தங்களது கவலைகளை எல்லாம் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நல்ல ராஜதந்திரம் உடையவர்கள்.
ரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்:
ரிஷபம் ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனியால் இதுநாள்வரை பல சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி கேது உடன் இணைப்போகும் குருபகவானால் உங்கள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.
இது வரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு 8-ம் இடத்திற்கு செல்கிறார்.அஷ்டமத்தில் குரு இருந்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும், இருப்பினும் குருவின் பார்வை உங்கள் ராசியின் முக்கிய இடத்திற்கு கிடைப்பதால் பல நன்மைகள் நடக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அடுத்தவருக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விருந்து விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வேண்டாதவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வாகன வசதிகள் பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
அட்டமச் சனி இருக்கும் உங்களுக்கு குருவின் இணைவு சுபத்துவதுத்தை ஏற்படுத்துவதால் அட்டமச் சனியின் தாக்கம் 75 சதவீதம் குறைந்துவிடும்.
எட்டாமிடத்தில் சனி இருந்து அங்கு குரு சம்பந்தப்படும்போது சுபத்துவம் ஏற்படுவதால் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ சென்று பிழைக்கும் அமைப்பு ஒரு சிலருக்கு ஏற்படும்.
குரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும்.
குரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும்.
ஒரு சொத்தை விற்று வேறொன்றை வாங்க வைக்கும். ஒரு இழப்பை கொடுத்து வேறொரு ஏற்றத்தை அளிக்கும். சமூகத்தில் கௌரவமாக உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இல்லையெனில், கௌரவப் பதவிகளுக்கு ஆபத்து வரும். அதனால் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
ராஜயோகம்:
சுக்கிரன் உங்க ராசி அதிபதி அவர் அசுர குரு அவருக்கு எதிரிதான் குருபகவான் இவர் தேவ குரு. ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்க ராசிக்கு 8 மற்றும் 11ஆம் அதிபதி அவரே. அவர் ஆட்சி பெற்று அமரும் போல பல நன்மைகள் ரிஷபத்திற்கு நடைபெறப்போகிறது. ரிஷபம் குரு எட்டாம் வீட்டில் போகிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தை அடைகிறார். ரிஷபத்தை விபரீத ராஜயோகம் கிடைக்கும். சனி கேது கூடவே இருந்தாலும் குரு பகவானால் நன்மைகள் நடைபெறும். 'கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது போல உங்களுக்கு கெடுதல் செய்யக்கூடிய குரு கெட்ட ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு போவதால் விபரீத ராஜயோகமாக ஒரு சிலருக்கு அமையும்.
குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு 2ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு இருக்கிறார், அந்த வீட்டை குரு பார்ப்பதால் சுபத்தோடு வருமானம் அதிகரிக்கும். பொருளதார வளர்ச்சியை தருவார் காரணம் 2ஆம் வீட்டை பார்க்கிறார். ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறார். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த கசப்பான அனுபவங்கள் நீங்கும்.
குரு தனது ஏழாம் பார்வையால்
4ஆம் வீட்டை குரு பார்க்கும் போது கடன் அதிகம் கிடைக்கும் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு கூடும். நன்றாக சாப்பிடுவீர்கள். இதுநாள் வரை சாப்பிடக்கூட முடியாமல் தவித்தவர்கள் வீடு வாங்கப்போகும் யோகம் வரப்போகிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் பூரண நலம் பிறக்கும். புரமோசன் வரக்கூடிய சூழ்நிலையும் உண்டு. பிசினஸ் அதிக பொருட்களை ஸ்டாக் வாங்க வேண்டாம். பண பரிவர்த்தனை கவனம் தேவை. உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை.
12ஆம் வீடான மேஷத்தின் மீது குரு பார்வை விழுவதால் நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் நிறைய வாங்குவீர்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். தினம் தினம் கஷ்டத்தோடு இருந்த நீங்க இனி கவலைப்பட வேண்டாம். குரு பகவான் உங்களுக்கு நன்மை செய்வார். சனி உங்க ராசிக்கு 8ல் அமர்ந்து வேலையை கெடுத்து வந்தார். எட்டாம் வீட்டில் குரு அமரும் போது பிரச்சினைகள் தீர்ந்து நன்மைகள் நடைபெறும். குரு பகவான் இடமாற்றத்தை தருவார். அது நன்மை தரும் மாற்றமாக இருக்கும். மொத்தத்தில் எட்டாம் வீட்டிற்கு தேவகுரு நகர்வதால் எல்லா வகையிலும் நன்மைகள்தான்.
மற்றபடி இந்த குருபெயர்ச்சி ரிஷராசிக்கு பணவரவில் உள்ள பாடத்தை கற்று கொடுக்கும்.
ரிஷப ராசிக்கு 2020ஆம் ஆண்டு மிதமான பலன் ஆண்டாகவே இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சியில் ஆரம்பத்தில் நிறைய தடைகளை சந்தித்தாலும் நாளடைவில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்பது உன்மை.
அதிர்ஷ்டம்:
எண் : 5,6,8,
நிறம் : வெண்மை, நீலம்
கிழமை : வெள்ளி, சனி
கல் : வைரம்
திசை : தென்கிழக்கு
தெய்வம் : விஷ்ணு, லக்ஷ்மி
நிறம் : வெண்மை, நீலம்
கிழமை : வெள்ளி, சனி
கல் : வைரம்
திசை : தென்கிழக்கு
தெய்வம் : விஷ்ணு, லக்ஷ்மி
பரிகாரம்:
ரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment