அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சிவன் ஆண்டார் கோவில் ஆதிவிடங்கம்
மூலவர் : பழனி ஆண்டவர் (பழனி தண்டாயுதபாணி )
தீர்த்தம் : பொய்கை
பழமை : 500 வருடங்களுக்கு மேலாக
ஊர் : சிவன் ஆண்டார் கோவில் (ஆதிவிடங்கம் அருகில் உள்ளது)
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு : பழனி முருகன் பக்தனுக்கு காட்சி தந்த இடம். இங்கு உள்ள முருகன் பழனி முருகன் போன்றே காட்சி தருகிறார்.
பொது தகவல்:
பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் அருள் பாலிப்பது போல் இங்கு அதே கோலத்தில் காட்சியளிக்கிறார்
தல வரலாறு : முன்னோர் காலத்தில் முருகன் பக்தர்கள் வருட வருடமாக பல ஊர்களில் இருந்து பல நாள்கள் கால் நடையாக நடந்து பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வருவார்கள். அப்படி ஒரு பக்தர் இவ்வழியாக வரும் போது உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. அவரால் ஒரு அடி எடுத்து வைக்ககூட முடியாமல் போனது. சற்றே ஓய்வு எடுத்துப் பார்த்தார் ஆனால் சரியாகவில்லை. உடனே பழனி தண்டாயுதபாணியை நினைத்து முருக உன்னை தரிசனம் செய்ய வேண்டும். இல்லையேல் நான் மடியவேண்டும் என்று கண்ணீருடன் மனமுருகி பழனி தண்டாயுதபாணியை வேண்டினார். அந்த தருணத்தில் பழனி தண்டாயுதபாணி பக்தர்க்கு காட்சி தந்து அவர் உடல்நிலையும் குணமடைய செய்து மறைந்தார். இந்த நிகழ்வை அனைவரிடம் கூறினார். முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முருகன் தரிசனம் தந்த இடத்தில் ஆலயம் அமைத்தார். இந்த முருகன் பழனி தண்டாயுதபாணியை போன்றே காட்சி தருகிறார். இந்த வரலாறு அந்த ஊரில் வாழும் பெரியவர்கள் கூறியது. 2016 யில் திருபணிகள் நடந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது.
No comments:
Post a Comment