மூலவர் : மதுசுந்தரேஸ்வரர்
தயார்:அமிர்தநாயகி அம்பாள்
வினாயகர் : நர்த்தனவிநாயகர் தல விருட்சம் : வில்வம், அத்தி,
பழமை :1000 வருடங்கள்
பொதுவான தகவல் : 10ம் நூற்றாண்டில் எழுந்தருளியுள்ள திருக்கோவில் தான் மதுசுந்தரரேஸ்வரர் என்ற திருக்கோவிலாகும். இக்கோவில் 10ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் மதுசுந்தரேஸ்வரராக சிவன் சன்னதியும், அமிர்த நாயகியாக பார்வதி சன்னதியும், நர்த்தன நடனம் ஆடிய நர்த்தன விநாயகர் சன்னதியும் உள்ளன. ஆயிரம் ஆண்டுக்கு முன் இளமதுக்கூர், திருமதுக்கூர், பெருமதுக்கூர் என்று மூன்று ஊர்கள் ன்்்ஒரே இடத்தில் அருகே அருகே அமைந்துள்ளது. தனி சிறப்பு. ஒரு காலத்தில் சிவனாண்டார், கூன்ஆண்டார், தேன்ஆண்டார், நம்பி ஆண்டார், பிச்சை ஆண்டார், ஆகிய பஞ்ச ஆண்டார் ஸ்தலங்கள். அருகில் அமைந்துள்ளது உள்்் அதில் இந்த ஆலயம் தேன் ஆண்டாராக உள்ளது.
தல வரலாறு :
பசுமையான மூன்று கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் தோன்றுவதற்கு காரணமாக மதுகமுனிவர், தாகமுனிவர், நாதமுனிவர் ஆகிய மூவரும் ஊருக்கு மத்தியில் உள்ள வில்வமரத்தின் கீழ் சிவன், பார்வதி இருவரையும் இணைந்து காணவேண்டி கடும் தவம் இருந்தனர். இரண்டு மூன்று நாட்களுக்கு பின் தவம் இருந்தபோது அசரீரி ஒன்று சிவனையும், பார்வதியையும் காணவேண்டும் என்றால், முதலில் முறையாக விநாயகரை வழிபடுங்கள். அதன்பிறகு இருவரையும் காணலாம் என்று கூறி மறைந்தது. அதன்பிறகு, முனிவர்கள் மூவரும் நாவற்பழம், விழாப்பழம், வாழைப்பழம், மாதுளம்பழம், அத்திப்பழம் என ஐந்து வகையான பழங்களை படைத்து நெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணைய் ஆகிய ஐந்து வகையான எண்ணெய்களை கலந்து வெள்ளை எருக்கு, செந்தாமரை தண்டு ஆகியவற்றின் தண்டுகளிலிருந்து நூலை எடுத்து அதனுடன் பட்டு நூலையும் எடுத்து ஐந்து முக தீபம் ஏற்றி தவம் செய்தனர்.
கடும் தவத்தின் விளைவாக விநாயகர் தோன்றி நர்த்தனம் நடனம் ஆடினார். முனிவர்கள் மூவரும் ஆனந்தம் அடைந்தனர். நர்த்தனம் ஆடும் விநாயகரை காண சிவனும், பார்வதியும் ஆசைப்பட்டு அவர்கள் முன்பாக தோன்றினர். இக்காட்சியை கண்ட முனிவர்கள் மூவரும் பேரானந்தம் அடைந்து, கலைந்த நிலையில் மூன்று பேரும் வெவ்வேறு பாதைகளில் சென்று இளமதுக்கூர், திருமதுக்கூர், பெருமதுக்கூர் என்ற பூஞ்சோலை கிராமங்களில் மறைந்ததால் அந்த கிராமங்களுக்கு அப்பெயர் வந்தது.
இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மேல் பாகத்தில் தேன் கூட்டிலிருந்து தேன் எப்போதும் லிங்கத்தின்மீது சொட்டிக்கொண்டே இருப்பதால் மதுசுந்தரேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. தனி சன்னதி தோன்றியது. அதேபோன்று பார்வதி அமிர்த நாயகியாக தோன்றினார். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என சக்திகள் மூன்று வகைப்படும். அமிர்தநாயகி இத்திருக்கோவிலில் ஞானசக்தியாக தோன்றி பக்தர்களுக்கு ஞானம், குடும்ப மகிழ்ச்சி இரண்டையும் அருளி வந்துள்ளார். அதேபோன்று, விநாயகர் நர்த்தன நடனம் ஆடிய நிலையில் தோன்றி பக்தர்களுக்கு செல்வம், சித்தபிரம்மை நீக்கம், வியாதி குணமடைதல், குடும்ப கவலை நீங்க அருள் தந்துள்ளார்.
இன்னும் ஒரு வரலாறாக : கருட பகவான் தேவர்களுடைய அமிர்த கலசத்தை இவ்விடத்தில் மறைத்ததாகவும் அதை முப்பெரும் தேவியர் துணைக்கொண்டு மூன்று முனிவர்கள் தவம் செய்து மறைக்கப்பட்ட அமிர்த கலசத்தை முப்பெரும் தேவியர் உதவியோடும் ஈசனுடைய அருளாளும் அமிர்த கலசத்தை மீட்டதால் அம்பாளுடைய திருநாமம் அமிர்தநாயகி அம்மாள் என்றும் அந்நிலையில் ஈசன் மதுவாகிய தேனில் திகைந்திருந்ததால் ஈசனுடைய திருநாமம் மதுசுந்தரேஸ்வர் என்றும் இதை கண்ட வினாயகர் நடனமாடியதால் வினாயகர் திருநாமம் நடனவிநாயகர் என்றும் தகவல் கூறப்படுகிறது தற்பொழுது திருக்கோயில் திருப்பணிகள் நடந்து முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓம் நமசிவாய
இக்கோவிலைக்காண திருவாரூரிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் பாதயில் திருநாட்டியத்தான்குடியில் இறங்கினால் ஒரு கி.மீ., தூரத்திலும், மன்னார்குடியிலிருந்து சேந்தங்குடி. சென்றால் ஒரு கி.மீ., தூரத்திலும் அழகிய திருக்கோவிலை காணலாம்.
No comments:
Post a Comment