Breaking

Friday, March 24, 2017

Srikalahasthi Temple- காளஹஸ்தி காளத்தீஸ்வரர் திருக்கோவில்

     








                                  மூலவர்:காளத்தியப்பர், காளத்தீசுவரர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை
  தல விருட்சம் : மகிழம்
  தீர்த்தம் : பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : சீகாளத்தி, திருக்காளத்தி
  ஊர் : காளஹஸ்தி
  மாவட்டம் : சித்தூர்
  மாநிலம் : ஆந்திர பிரதேசம்
பாடியவர்கள்:
   
  அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

கொண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே வண்டாரும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய் அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தொண்டை நாட்டு தலங்களில் இது 19வது தலம். 
   
திருவிழா:
   
  மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.
                                                         
                      தல சிறப்பு:
   
  இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இது வாயு (காற்று)தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்
      
               தல வரலாறு:
   
 
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: ""வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,''. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.
வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.
   
சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு (காற்று)தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். 
            
             

No comments:

Post a Comment