Tuesday, March 28, 2017

Lord murugan -முருகனின் ஆறுபடை வீடுகள்

       முருகனின் ஆறுபடை வீடுகள்
     தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு(திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.)
       குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.
கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.  இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம்-2 ஆம் படை வீடு
       பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.தலம் பழனி - 3-ஆம் படை வீடு
          
       கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு
        வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில்- 5ஆம் படைவீடு  வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன.
             சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில்-6ஆம் படைவீடு
ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
ஆறுபடை வீடுகள் click here :

                                                    1. படைவீடு
         
                                                     2. படைவீடு

                                                      3. படைவீடு

                                                      4. படைவீடு

                                                      5. படைவீடு

                                                      6. படைவீடு

No comments:

Post a Comment